1 00:00:55,431 --> 00:00:56,724 அட வா. 2 00:00:57,183 --> 00:00:58,809 -சும்மா கூட வா. -மாட்டேன். 3 00:00:58,893 --> 00:01:01,729 -தயவுசெய்து? -நிச்சயமா மாட்டேன். 4 00:01:02,396 --> 00:01:05,274 இது அவர்களின் கடைசி ஒன்றுசேர்ந்த பயணமாக இருக்கலாம். 5 00:01:05,357 --> 00:01:06,567 ஆமாம், அப்படி இருக்கும்னு நம்புறேன். 6 00:01:07,777 --> 00:01:08,986 அவர்கள் மிகச்சிறந்த இசைக்குழு. 7 00:01:09,069 --> 00:01:10,154 அதை விடு. 8 00:01:10,988 --> 00:01:11,989 பாரு, உன்னை நான் தடுக்கவில்லை. 9 00:01:12,072 --> 00:01:14,158 நிஜமாகவே போகணும்னா, முன்வரிசை இருக்கைகள் வாங்கித் தருகிறேன், 10 00:01:14,241 --> 00:01:15,576 ரேச்சலை கூட்டிக்கிட்டு போ. 11 00:01:15,659 --> 00:01:18,329 எனக்கு ரேச்சலை அழைத்துப் போக விருப்பமில்லை. நீ என்னுடன் வரணும். 12 00:01:19,371 --> 00:01:21,373 எனது காதுகளை வெட்டித் தள்ள உந்தப்படுவேன். 13 00:01:21,457 --> 00:01:22,750 -ரத்தம் சிந்தி அசிங்கம் செய்வேன். -சரி. 14 00:01:22,833 --> 00:01:25,044 சரி, அப்போ நான் அதை சுத்தம் பண்ணிடுவேன். 15 00:01:25,127 --> 00:01:27,713 -பண்ணுவாயா? -ஆம். அறிவு ஜீவி. 16 00:01:29,006 --> 00:01:30,299 உனக்கு ரொம்ப பிடிக்கும். 17 00:01:30,341 --> 00:01:31,383 பிடிக்குமா? 18 00:01:31,467 --> 00:01:33,260 -ஆம், உனக்கு பிடிக்கும். -ஆம். 19 00:02:05,084 --> 00:02:08,671 த பாய்ஸ் 20 00:02:24,562 --> 00:02:25,563 ஹாட் போக்கெட்ஸ் 21 00:03:19,158 --> 00:03:20,451 -ஹேய். -காலை வணக்கம். 22 00:03:24,580 --> 00:03:25,623 காலை வணக்கம். துணை இயக்குனர். 23 00:03:29,543 --> 00:03:31,128 எப்படி இங்கு நுழைந்தாய்? 24 00:03:32,546 --> 00:03:36,050 நீ எனது துவைக்கும் அறையில் உள்ள சுவர் அழுக்கு மாதிரி. 25 00:03:36,133 --> 00:03:38,260 உன்னை சுரண்டி எடுத்தாலும் திரும்பி வருவே. 26 00:03:40,554 --> 00:03:42,973 உனக்கு கொஞ்சம் எரிச்சல் பிரச்சனை இருக்கு போலிருக்கு, அன்பே. 27 00:03:43,057 --> 00:03:44,558 பாதுகாவலர், தயவுசெய்து. 28 00:03:45,601 --> 00:03:47,561 சூப்பர்ஹீரோக்கள் ராணுவத்தில் நுழைவதை நான் தடுக்கமுடியும். 29 00:03:47,645 --> 00:03:50,022 எனக்கு அதைப் பத்தி கவலைன்னு ஏன் நினைக்கிறாய்? 30 00:03:50,105 --> 00:03:52,691 என் கருத்து, அவர்கள் எப்போ சிரியாவுக்கு போவாங்கன்னு காத்திருக்கேன். 31 00:03:53,901 --> 00:03:54,902 சரிதான், நிச்சயமாக. 32 00:03:57,488 --> 00:04:00,658 போன வாரம், ஏ-ட்ரெய்ன் பெரிய பந்தயத்துக்கு முன் ஊக்க மருந்து ஊசி போட்டான். 33 00:04:00,741 --> 00:04:05,079 அவனது காதலி, பாப்க்ளா, அதே ஊசியை போட்டுக் கொள்கிறாள். 34 00:04:05,162 --> 00:04:06,705 அதை கலவை வி என்று அழைக்கிறார்கள். 35 00:04:06,789 --> 00:04:10,417 சூப்பர்ஹீரோக்களுக்கான ஏதோ ஒரு வகை ஊக்கமருந்து, அவர்களை பலமேற்றுது. 36 00:04:10,501 --> 00:04:14,672 இப்போ, சூப்பர்ஹீரோக்கள் வெறும் ஊக்கமருந்துக் கூட்டம்னு வெளியே தெரிஞ்சா, 37 00:04:14,755 --> 00:04:17,216 யாரும் அவர்கள் தேசிய பாதுகாப்பில் இருப்பதை விரும்ப மாட்டாங்க. 38 00:04:18,968 --> 00:04:20,010 மாதிரி கிடைத்ததா? 39 00:04:21,136 --> 00:04:22,388 இன்னும் இல்லை. 40 00:04:23,389 --> 00:04:25,975 இது போதைப்பொருளாக இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம். 41 00:04:26,058 --> 00:04:27,393 நீ என்னை நம்பவில்லை. 42 00:04:27,476 --> 00:04:29,311 சூசன், அதுபற்றி நான் அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறேன். 43 00:04:29,395 --> 00:04:31,480 நிஜமாவா? நிச்சயமாக நம்புகிறேன். 44 00:04:31,939 --> 00:04:36,402 இன்னொரு விஷயம், நான் ட்ரான்ஸ்லூசென்ட்டை எங்கேயும் பார்க்கல. 45 00:04:36,485 --> 00:04:39,196 உனக்கு அது பற்றி ஏதாவது தெரியுமா? 46 00:04:39,905 --> 00:04:42,741 அவன் புலனாகாதவன். அந்த மூலையில் நின்று கொண்டிருக்க கூடும், 47 00:04:42,825 --> 00:04:44,702 அசிங்கமா ஏதாவது செஞ்சுக்கிட்டு இருப்பான். 48 00:04:45,744 --> 00:04:46,912 பாரு. 49 00:04:47,621 --> 00:04:51,208 சூப்பர்ஹீரோக்கள் மோசமானவர்கள்னு நினைச்சா, அவர்கள் ராணுவ சீருடை அணியும் வரை காத்திரு. 50 00:04:51,291 --> 00:04:53,127 புரியுதா, சார்ஜன்ட் ஹோம்லாண்டர் 51 00:04:53,210 --> 00:04:55,879 சில ஆயிரக்கணக்கான சீனர்களை கொல்வதை எது தடுக்கும்? 52 00:04:55,963 --> 00:04:57,381 அவனை போர் குற்றத்துக்கு எப்படி விசாரிப்பே? 53 00:04:57,464 --> 00:05:00,718 அவன் த ஹேகில் ஒரு அடி வைக்கும் முன் நம்மையெல்லாம் கொன்று குவிப்பான். 54 00:05:00,801 --> 00:05:04,388 புரியுதா, இப்போதே வாட்டிடம் அணு ஆயுதங்களின் சாவியை கொடுக்கலாம். 55 00:05:09,393 --> 00:05:11,145 இதில் ரொம்ப ஈடுப்பாட்டோட இருக்கே, சரிதானே? 56 00:05:12,855 --> 00:05:14,732 ஒரு நல்ல குடிமகனாக இருக்கேன், அன்பே. 57 00:05:14,815 --> 00:05:16,316 தெரியும். 58 00:05:18,110 --> 00:05:22,531 சரி, எனக்கு பலமான ஆதாரத்தை கொடு, 59 00:05:22,614 --> 00:05:25,701 நான் பயன்படுத்தக்கூடிய ஆதாரம், 60 00:05:25,784 --> 00:05:31,081 உனது நடவடிக்கை செலவுகளுக்கு கொஞ்சம் பணம் கூட கொடுக்க முடியும். 61 00:05:36,628 --> 00:05:38,130 ஆனால் இதில் என்னை நீ ஏமாற்றினால், 62 00:05:38,714 --> 00:05:39,965 உனது மிச்ச வாழ்க்கை முழுவதும், 63 00:05:40,049 --> 00:05:42,926 நீ இருட்டு இடத்தில் உன் சிறுநீரை குடிப்பாய். 64 00:05:44,219 --> 00:05:45,846 புரிந்ததுன்னு சொல்லு. 65 00:05:47,556 --> 00:05:51,810 பாரு, இப்போ, சூசன், இதனால் தான் நமது உறவு முறிந்தது. 66 00:05:51,894 --> 00:05:54,313 உன்னிடம் இரண்டு சிறந்த ஆண்கள் இருக்க முடியாது, ஏனெனில் அதில் ஒருவர்... 67 00:05:54,396 --> 00:05:56,982 புரிந்தது என்று சொல்லித் தொலை. 68 00:05:59,526 --> 00:06:01,236 எனக்கு புரிந்தது. 69 00:06:02,988 --> 00:06:05,074 நினைவுபடுத்து, நமது ஒப்பந்தம் என்ன? 70 00:06:05,157 --> 00:06:06,116 என்ன? 71 00:06:06,200 --> 00:06:07,451 நமது ஒப்பந்தம் என்ன? 72 00:06:07,534 --> 00:06:11,080 நாசமாப் போ. ஏற்கனவே சொன்னேன், ஏ-ட்ரெய்ன் கலவை வியின் தயாரிப்பை... 73 00:06:11,163 --> 00:06:13,791 ஆம், டிவிஷனில் உள்ள நூடுல்ஸ் கடையில் கலவை வியை தயாரிக்கிறான். 74 00:06:14,333 --> 00:06:16,794 வாரம் முழுக்க கண்காணிச்சோம், ஆனால் ஒன்றும் தெரியவில்லை. 75 00:06:16,877 --> 00:06:18,670 சரி, அவன் எங்கு போனாலும், அது அந்த பகுதியில் இருக்கு. 76 00:06:18,754 --> 00:06:21,799 ஒவ்வொரு முறையும் அவன் கலவை வியை விட்டுப் போகும்போது எள்ளு நூடுல்ஸ் எடுத்து வருவான். 77 00:06:21,882 --> 00:06:22,883 எனக்கு அவ்வளவு தான் தெரியும். 78 00:06:22,966 --> 00:06:24,593 சரி, நீ சொன்னது சரியாக இருக்கணும், அன்பே. 79 00:06:25,177 --> 00:06:28,889 அல்லது நீயும் உன் இறந்துபோன வீட்டு உரிமையாளனும் நீலப்பட இணையதளத்தில், 80 00:06:28,972 --> 00:06:30,724 இன்பத்தின்போது மரணம் பிரிவில் தெரிவீங்க. 81 00:06:30,808 --> 00:06:32,351 கேடுகெட்டவனே, நீ அப்படி... 82 00:06:36,855 --> 00:06:38,273 நூடுல் பேலஸ் 83 00:06:38,357 --> 00:06:40,984 மன்னிச்சிடு, அன்பே, சமீப காலமா வேலை ரொம்ப அதிகமா இருக்கு. 84 00:06:41,068 --> 00:06:43,403 நான் வீட்டில் இருந்து உன் கால்விரல்கலை தடவணும்னு ஆசை தான், 85 00:06:43,487 --> 00:06:44,655 சண்டைகளை பிரிப்பதில் இஷ்டமில்லை, 86 00:06:44,738 --> 00:06:46,865 ஆனால், தெரியுமா, எனக்கு சம்பளம் முக்கியமாச்சே? 87 00:06:46,949 --> 00:06:48,700 நிச்சயமா. 88 00:06:48,784 --> 00:06:52,412 சம்பள நாள் வந்ததும், நாம் கே நகைக்கடைக்கு போய், எல்லாத்தையும் வாங்குவோம். 89 00:06:53,122 --> 00:06:54,540 மதுக் குளியல் கூட. 90 00:06:57,334 --> 00:07:01,088 தெரியும், தெரியும், விளையாடுகிறேன். சரி, அன்பே, பிறகு பேசுகிறேன். 91 00:07:06,510 --> 00:07:07,553 ஏதாவது சொல்லு. 92 00:07:10,472 --> 00:07:13,267 தெரியுமா, ஜான்-பால் சாற்றே சொன்னார், 93 00:07:13,350 --> 00:07:16,186 "ஆணின் அவசியமான உந்துதல்களை திருமணம் திணற வைக்கிறது." 94 00:07:16,270 --> 00:07:19,648 ஜான்-பால் சாற்றே வயதாகி தனியாவும் செத்துப் போனார். 95 00:07:19,982 --> 00:07:22,651 அது மட்டுமில்லாமல், அவரது காதலி வேறு ஒருவனோட குடிபோனாள். 96 00:07:22,734 --> 00:07:24,653 ஆம், அவர்கள் சுதந்திர தம்பதியினர். 97 00:07:24,736 --> 00:07:26,572 எதுக்கான சுதந்திரம்? பாலியல் நோய் பெறுவதிலா? 98 00:07:27,656 --> 00:07:29,241 அட, ஃப்ரென்ச்சி. 99 00:07:29,324 --> 00:07:30,742 இரவு வீட்டிற்கு போய் 100 00:07:30,826 --> 00:07:33,579 கூட படுக்க ஒருத்தர் இல்லைன்னா எதற்காக கடினமா உழைக்கணும்? 101 00:07:33,662 --> 00:07:36,415 சரி, நான் ஒவ்வொரு இரவும் வேற வேற பெண்கள் அருகில் படுக்கிறேன். 102 00:07:36,498 --> 00:07:38,542 ஆம், அது ஏன்னா நீயும் ஒரு வயதான தனிமையான கேடுகெட்டவன். 103 00:07:38,625 --> 00:07:40,043 நீ தனியாக சாகப் போகிறாய். 104 00:07:40,669 --> 00:07:43,088 சரி, உனக்கும் மொனீக்குக்கும் இடையிலான உறவு அவ்வளவு தூய்மையானது என்றால், 105 00:07:43,172 --> 00:07:45,090 ஏன் நீ இருக்கும் இடத்தை பற்றி அவளிடம் பொய் சொல்றே? 106 00:07:55,559 --> 00:07:57,561 நூடுல் ஆள். ஆயுதம் வெச்சிருக்கான். 107 00:07:58,896 --> 00:08:00,063 யப்பா கடைசியில் ஏதோ நடக்குது. 108 00:08:41,271 --> 00:08:42,814 நாம் அதனுள் போகணும், சரிதானே? 109 00:08:43,357 --> 00:08:45,025 பயப்படாதே, சின்ன ஹ்யூயி. 110 00:08:45,108 --> 00:08:47,945 என்னை அப்படி கூப்பிடுவதை நிறுத்தறியா? நான் ஆறு அடி உயரமானவன். 111 00:09:43,375 --> 00:09:46,378 சீக்கிரம், போகலாம். அந்த பெட்டிகளை சோதனையிடு. 112 00:09:53,135 --> 00:09:54,511 ஃப்ரென்ச்சி, வியை தேடு. 113 00:10:02,894 --> 00:10:04,980 ஃப்ரென்ச்சி, வா, போகலாம். அந்த பெட்டிகளை சோதனையிடு. 114 00:10:08,358 --> 00:10:09,901 வா, ஃப்ரென்ச்சி, என்ன செய்கிறாய்? 115 00:10:12,821 --> 00:10:14,031 நீ செவிடனா? 116 00:10:17,242 --> 00:10:18,243 கடவுளே. 117 00:10:25,625 --> 00:10:26,626 அது யாரு? 118 00:10:27,169 --> 00:10:28,628 அவளை விடுவிச்சுட்டு போகலாம்னு நினைக்கிறேன். 119 00:10:28,712 --> 00:10:30,130 இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை. 120 00:10:30,213 --> 00:10:32,924 இங்கு வி எடுக்க வந்திருக்கோம், எடுத்ததும் போகணும். காப்பாற்றும் திட்டம் இல்லை. 121 00:10:33,967 --> 00:10:35,135 புட்சர் மாதிரி பேசுகிறாய். 122 00:10:35,802 --> 00:10:37,596 நான் உயிரோடு இருக்க விரும்புபவன் மாதிரி பேசுகிறேன். 123 00:10:40,474 --> 00:10:42,351 நாசமாப் போ, ஃப்ரென்ச்சி, என்ன... 124 00:10:44,895 --> 00:10:46,355 ஹேய்! அவளை வெளியில் விடாதே! 125 00:10:53,487 --> 00:10:54,404 ஓ, கடவுளே! 126 00:11:08,794 --> 00:11:09,753 ஓ, நாசம். 127 00:11:09,836 --> 00:11:11,797 -ஹ்யூயி, போகலாம். போகலாம், ஹ்யூயி! -போ, போ. 128 00:11:11,880 --> 00:11:12,881 அட வா. 129 00:11:37,864 --> 00:11:39,991 ஓரிரு வாரங்களுக்கு முன்னால், நாங்கள் எல்லோரும்... 130 00:11:40,075 --> 00:11:41,952 நாங்கள் எல்லோரும் பொது அறையில் குடிச்சோம். 131 00:11:42,911 --> 00:11:44,496 சூப்பர் பவுல் போலவே என்று நினைக்கிறேன். 132 00:11:47,332 --> 00:11:49,292 எனக்கு தெரியல, குடிச்சிருந்தேன்னு நினைக்கிறேன், ஆனால்... 133 00:11:52,212 --> 00:11:53,338 தெரியுமா, நான் முயற்சித்தேன். 134 00:11:55,382 --> 00:11:57,050 நிஜமா முயற்சித்தேன்... 135 00:11:59,302 --> 00:12:00,637 நண்பர்களுடன் பேசுவதற்கு. 136 00:12:01,721 --> 00:12:02,722 எதைப்பற்றி? 137 00:12:04,307 --> 00:12:05,392 டால்ஃபின்கள். 138 00:12:06,143 --> 00:12:07,686 தெரியுமா, ஜப்பானில், 139 00:12:07,769 --> 00:12:10,939 வருடத்திற்கு 20,000 டால்ஃபின்களை வேட்டையாடி கொல்கிறார்கள்? 140 00:12:11,022 --> 00:12:12,232 அறிவுப்பூர்வமான பிராணிகள். 141 00:12:12,983 --> 00:12:17,487 ஆம், அவைகளுக்கு பிராந்திய மொழிப்பாணியும், அபாரமான நகைச்சுவை உணர்வும் உண்டு. 142 00:12:17,571 --> 00:12:19,990 புரியுதா, அவை... நகைச்சுவை நிறைந்தவை. 143 00:12:21,783 --> 00:12:22,784 ஆம். 144 00:12:23,785 --> 00:12:25,370 அன்றிரவு, ஏ-ட்ரெய்ன்... 145 00:12:26,830 --> 00:12:29,583 அதன் பின்பக்கத்தில் உதட்டு சாயம் பூசிய டால்ஃபின் பொம்மையை 146 00:12:31,626 --> 00:12:33,336 என் படுக்கையில் வைத்தான். 147 00:12:34,588 --> 00:12:36,381 தெரியுமா, கலைநயமான கேடுகெட்டவர்கள். 148 00:12:39,718 --> 00:12:41,011 என்னை மன்னிக்கணும். 149 00:12:42,721 --> 00:12:43,847 அது வலிக்கும். 150 00:12:46,057 --> 00:12:48,894 ஆம், நான்... நான் இங்கு வேறுபட்டவன். 151 00:12:50,729 --> 00:12:52,189 நான் ஒரு வேடிக்கை துணுக்கு. 152 00:12:53,899 --> 00:12:57,194 புரியுதா, ஆம், என்னால் மீன்களுடன் பேசமுடியும், அதனால் என்ன? 153 00:12:58,320 --> 00:13:01,781 சால்மன் கூட்டத்தால் காப்பாற்ற படணும் என்கிற நிலை எத்தனை முறை வரும்? 154 00:13:02,324 --> 00:13:04,493 கெவின், அது உண்மையில்லை. 155 00:13:05,660 --> 00:13:08,121 கார்னிவல் க்ரூஸ் கப்பல் நீ இல்லாமல் என்னாகும்? 156 00:13:09,956 --> 00:13:12,667 ஆம். தெரியும். 157 00:13:16,046 --> 00:13:20,342 சரி, நான் நானாக இருக்க வேண்டும். அதிக தன்னம்பிக்கையை காட்ட வேண்டும். 158 00:13:21,885 --> 00:13:23,678 கடைசியில், நீ யார்? 159 00:13:24,596 --> 00:13:25,847 நான் த செவனில் ஒருவன். 160 00:13:25,931 --> 00:13:27,432 அதன் பொருள் என்ன? 161 00:13:27,516 --> 00:13:29,100 நான் மனது வைத்த எதையும் செய்யக் கூடியவன். 162 00:13:30,310 --> 00:13:32,020 நீ எதன் மேல் மனதை வைக்கப் போகிறாய்? 163 00:14:00,006 --> 00:14:01,383 என்ன அசிங்கம். 164 00:14:03,385 --> 00:14:04,302 நீ நலம்தானே? 165 00:14:05,095 --> 00:14:07,681 புரியுதா, இது இதற்கு மேலும் கொடூரம் ஆகாது என்று நினைத்தபோது... 166 00:14:07,764 --> 00:14:09,140 இல்லை, கவலைப்படாதே. 167 00:14:10,392 --> 00:14:12,394 இதை விட கொடூரமாகும். 168 00:14:23,822 --> 00:14:26,741 டேவிட் மெரடித் எஸ்ஹெச்என்யூ - யார்க் பென், என்வைஎஸ்ஈ 169 00:14:30,662 --> 00:14:33,331 ஹேய், புட்சர். இங்கே வந்து இதை பாரு. 170 00:14:39,045 --> 00:14:40,380 பாரு. 171 00:14:43,675 --> 00:14:44,843 வி. 172 00:14:46,386 --> 00:14:48,346 அப்போ, ஏ-ட்ரெய்ன் அதை இங்கு தயாரிக்கிறான். 173 00:14:48,430 --> 00:14:50,682 இந்த பசங்க அந்த ஆசியப் பெண்ணுக்கு அதை கொடுத்திருக்காங்க. 174 00:14:50,765 --> 00:14:51,975 ஆம், அவர்களுக்கு கண்கள் இருந்தபோது. 175 00:14:52,058 --> 00:14:56,646 ஆம், ஆனால் ஏன்? அது வாட் விஷயமா அல்லது பக்கவாட்டு தொழிலா? 176 00:14:57,981 --> 00:14:59,441 பரிசு பொருள் மாதிரி இதில் சுற்றியிருந்தது. 177 00:15:02,652 --> 00:15:04,362 அது எங்கிருந்து வந்ததுன்னு கண்டுபிடி. 178 00:15:04,446 --> 00:15:05,614 விசாரித்துப் பார்க்கிறேன். 179 00:15:07,699 --> 00:15:09,409 அவளுக்கு என்ன மருந்து ஏற்றினாங்க? 180 00:15:09,492 --> 00:15:13,038 ஃப்ரென்ச்சியைக் கேட்டு பாரேன்? அவன் தான் அவளை தப்பிக்க விட்டான். 181 00:15:13,580 --> 00:15:15,540 -பாவமா இருந்தா? -பாவமா? 182 00:15:17,000 --> 00:15:20,837 பாதாள கூண்டில் இரண்டு ஆயுதம் ஏந்தின காவலர்களோடு பூட்டப்பட்டிருக்கா? 183 00:15:20,920 --> 00:15:22,213 அவளை பற்றி ஏதோ தோன்றியது. 184 00:15:22,297 --> 00:15:24,549 இல்லை, ஃப்ரென்ச்சி, நீ திட்டத்தை பின்பற்றுவதே இல்லை. 185 00:15:24,633 --> 00:15:25,967 நீ திட்டத்தை பின்பற்றுவதே இல்லை, டா. 186 00:15:26,051 --> 00:15:27,719 நீ கொஞ்சம் அமைதியாகணும். 187 00:15:27,802 --> 00:15:29,596 நீ அமைதியை தட்டில் போட்டு சாப்பிடு. அதெப்படி? 188 00:15:29,679 --> 00:15:32,557 ஏன் நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டே இருக்கீங்க? 189 00:15:33,183 --> 00:15:35,894 வாட்டர்கேட் ஊழல் அளவுக்கு ஒரு ஊழலை நாம் விசாரிக்கிறோம். 190 00:15:35,977 --> 00:15:38,772 வாட்டும் சூப்பர்ஹீரோக்களும் அவளை தேடிட்டு இருப்பாங்க. 191 00:15:38,855 --> 00:15:42,025 நாம் செய்ய வேண்டியது த ஃபீமேலை முதலில் கண்டுபிடிக்கணும். 192 00:15:48,156 --> 00:15:49,240 தேடிட்டே இருங்க. 193 00:15:52,952 --> 00:15:53,953 யாரு அது? 194 00:15:54,037 --> 00:15:55,038 யாருமில்லை. 195 00:16:02,253 --> 00:16:04,005 "ஆன்னி." ஸ்டார்லைட்? 196 00:16:04,089 --> 00:16:07,175 ஆம், ஒன்றுமில்லை. அதாவது, நாங்கள் சந்திப்பதாக திட்டமிட்டோம். 197 00:16:07,258 --> 00:16:08,677 சந்திப்பல்ல, சும்மா... 198 00:16:08,760 --> 00:16:11,554 அவளது கைபேசி எண் வேண்டுமா என்று என்னை கேட்டாள், 199 00:16:11,638 --> 00:16:13,765 நாங்கள் நட்பாக தகவலை பரிமாறிக்கிட்டோம், 200 00:16:13,848 --> 00:16:16,518 ஆனால்... "சந்திப்பு" என்கிற சொல் பயன்படுத்தப் படவில்லை. 201 00:16:16,726 --> 00:16:18,520 அவளை இப்போதே திரும்ப அழைத்திடு. நீ போயாகணும். 202 00:16:18,603 --> 00:16:23,024 ஒரு விதிமுறையா, கொடூர படுகொலைக்கு பிறகு நான் வெளியே போவதில்லை. 203 00:16:23,108 --> 00:16:26,403 கேளு, இதுதான் வேலை. அவளது கைபேசியில் நீ உளவுக் கருவி பொருத்தணும். 204 00:16:26,486 --> 00:16:28,613 இனிமேல், அவள் என்ன பேசினாலும் நாம் கேட்போம். 205 00:16:28,697 --> 00:16:31,157 புரியுதா, இது அருமையான வாய்ப்பு. 206 00:16:31,241 --> 00:16:33,410 நீ செய்த எல்லாத்தையும் பார்க்கையில், இது மிக எளிது. 207 00:16:34,744 --> 00:16:38,123 ஆம், அவள்... அவள் மோசமானவள் அல்ல. 208 00:16:40,333 --> 00:16:44,921 அவள் ஒரு சூப்பர்ஹீரோ, ஹ்யூயி. மற்றவர்களைப் போலவே. 209 00:16:50,844 --> 00:16:53,388 சரி, நாம் எப்போதும் இதை மறைத்துவிட முடியாது. 210 00:16:53,471 --> 00:16:56,599 ட்ரான்ஸ்லூசென்ட் விரைவில் மக்கள் முன் வரலைன்னா, எல்லாரும் கவனிக்க ஆரம்பிப்பாங்க. 211 00:16:56,683 --> 00:16:58,101 நாம் முந்திக்கொண்டால் என்ன? 212 00:16:58,184 --> 00:17:01,104 தனது நாட்டிற்கான சேவையில் அவன் இறந்ததாக உலகிற்கு அறிவித்தால்? 213 00:17:01,187 --> 00:17:03,606 கென்னடியின் இறுதிச்சடங்கை விட பெரிய இறுதிச்சடங்காக நடத்தலாம். 214 00:17:03,690 --> 00:17:04,607 எனக்கு தெரியல. 215 00:17:04,691 --> 00:17:07,569 கொல்லப்பட முடியாத சூப்பர்ஹீரோக்களுள் ஒருவர் கொல்லப்பட்டதாக ஒப்புக்கொள்வதா? 216 00:17:07,652 --> 00:17:09,571 ராணுவ மசோதா தோல்வியடையும். 217 00:17:09,654 --> 00:17:12,866 ரொம்ப யோசிக்க வேண்டாம். அவன் ஒரு ரகசிய செயல்திட்டத்தில் இருப்பதாக சொல்வோம். 218 00:17:12,949 --> 00:17:15,744 தேசிய பாதுகாப்பு கருதி, அவன் எங்கிருக்கான்னு சொல்ல முடியாது. 219 00:17:15,827 --> 00:17:18,079 அவன் எம்எஸ்-13ஐ எதிர்த்து போராடுகிறான்னு சொல்லலாம். 220 00:17:18,163 --> 00:17:19,372 ஆம், அது நல்லது. 221 00:17:19,456 --> 00:17:20,874 எளிது. பண்ணிடலாம். பூம். 222 00:17:20,957 --> 00:17:23,042 எம்எஸ்-13, எனக்கு பிடிச்சிருக்கு. 223 00:17:24,544 --> 00:17:25,420 ஹலோ. 224 00:17:27,380 --> 00:17:28,423 என்ன? 225 00:17:29,841 --> 00:17:30,717 எப்போ? 226 00:17:33,052 --> 00:17:34,804 எத்தனை பேருக்கு தெரியும்? 227 00:17:35,764 --> 00:17:36,806 ஏழு நிமிடங்களுக்கு முன், 228 00:17:36,890 --> 00:17:41,728 பாரிஸிலிருந்து சிக்காகோவுக்கு வரும் ட்ரான்ஸ் ஓஷனிக் விமானம் 37 கடத்தப்பட்டது. 229 00:17:41,811 --> 00:17:42,771 ஏழு நிமிடங்களுக்கு முன்னரா? 230 00:17:42,854 --> 00:17:44,606 ஆம், விமானத்துறையில் ஒரு உளவாளி நமக்கு சொன்னான். 231 00:17:44,689 --> 00:17:45,899 எத்தனை கடத்தல்காரர்கள்? 232 00:17:45,982 --> 00:17:47,025 மூன்று பேர் மாதிரி தெரியுது. 233 00:17:47,108 --> 00:17:48,777 எஃப்-16 ஜெட்களை அனுப்பிட்டாங்களா? 234 00:17:48,860 --> 00:17:52,822 ஆம், இப்போது அனுப்புறாங்க. ஆனால் நீ அங்கு இன்னும் விரைவில் போக முடியும். 235 00:17:55,283 --> 00:17:56,659 அறையை தயவுசெய்து காலி செய்ய முடியுமா? 236 00:17:58,953 --> 00:18:00,121 அட்லான்ட்டிக்கின் நடுவில். 237 00:18:01,164 --> 00:18:02,415 -ஆம். -எவருக்கும் சொந்தமற்ற இடம். 238 00:18:02,499 --> 00:18:04,417 நீ அன்னிய மண்ணில் வேலை செய்ய முடியாது. 239 00:18:04,501 --> 00:18:06,628 ஆனால் சர்வதேச கடலின் மேல் கடத்தப்பட்ட விமானம்? 240 00:18:06,711 --> 00:18:09,339 நீ தடுத்தால், யாரும் எதிர்க்க மாட்டாங்க. 241 00:18:10,381 --> 00:18:12,550 பயணிகளை நீ உயிருடன் திரும்ப கொண்டுவந்தால், 242 00:18:13,384 --> 00:18:16,596 ஒரு சட்டசபை உறுப்பினர் கூட நமது மசோதாவை எதிர்த்து வாக்களிக்க மாட்டாங்க. 243 00:18:23,478 --> 00:18:25,480 இது நமக்கான வாய்ப்பு. 244 00:18:26,147 --> 00:18:28,149 ட்ரான்ஸ்லூசென்ட்டை விட முக்கியம். 245 00:18:29,609 --> 00:18:31,486 எதையும் விட முக்கியம். 246 00:18:31,569 --> 00:18:34,155 ட்ரான்ஸ் ஓஷானிக் விமானம் 37 247 00:18:36,115 --> 00:18:37,116 திடமான ஹாலோத்தேன். 248 00:18:40,829 --> 00:18:44,624 உறுதி கொடுக்க முடியாது, ஆனால் உன் பெண்ணை மயக்கமடைய செய்யும். 249 00:18:44,707 --> 00:18:46,000 நன்றி, அன்பே. 250 00:18:46,084 --> 00:18:47,877 நான் போகணும். இந்தப் பெண், வேகமாக முன்னேறுகிறாள். 251 00:18:47,961 --> 00:18:50,129 ஹேய், உனக்காக ஏங்குகிறேன். 252 00:18:52,048 --> 00:18:54,092 நமக்காக பவரியில் அறையை ஏற்பாடு செய்திருக்கேன். 253 00:18:56,344 --> 00:18:57,428 எப்போது வருவாய்? 254 00:18:59,180 --> 00:19:02,475 முடிந்த அளவு சீக்கிரத்தில். சத்தியமாக. 255 00:19:02,559 --> 00:19:03,476 சத்தியமாகவா? 256 00:19:06,688 --> 00:19:10,733 அந்த வாயுவை உன்மேல் பயன்படுத்த வைக்காதே, அன்பே. 257 00:19:11,401 --> 00:19:12,402 சரியா? 258 00:19:12,777 --> 00:19:13,987 சரி! 259 00:19:42,348 --> 00:19:43,182 நாசம்! 260 00:19:46,019 --> 00:19:47,395 எப்போது தடுப்பார்கள்? 261 00:19:49,063 --> 00:19:52,901 கோர்ப்போரல், அறையில் யார் இருந்தாலும் கவலையில்லை. எனக்கு தகவல் வேண்டும். 262 00:19:54,777 --> 00:19:55,778 கடவுளே. 263 00:19:56,487 --> 00:19:57,822 ஹேய், ஒரு நொடி இருக்குமா? 264 00:19:58,323 --> 00:20:00,491 -இது சரியான நேரம் அல்ல. -ரொம்ப பாராட்டுவேன். 265 00:20:00,575 --> 00:20:01,743 -சின்ன விஷயம், தயவுடன். -முடியாது. 266 00:20:01,826 --> 00:20:03,119 -நன்றி. -சரி. 267 00:20:05,288 --> 00:20:07,832 அப்போ, நான் ஒரு செயல்திட்டத்தை கண்டுபிடிச்சேன். 268 00:20:09,626 --> 00:20:14,964 அது ரொம்ப முக்கியம்னு நினைக்கிறேன், அதை செய்ய விரும்புகிறேன். 269 00:20:15,048 --> 00:20:16,674 உனது அனுமதியுடன், நிச்சயமாக. 270 00:20:16,758 --> 00:20:18,343 என்ன? எங்கே? 271 00:20:18,801 --> 00:20:19,844 ஓஷன்லாண்ட். 272 00:20:20,219 --> 00:20:21,429 ஓஷன்லாண்டா? 273 00:20:21,763 --> 00:20:23,473 ஆம். அதனால்... 274 00:20:24,223 --> 00:20:26,309 இதைக் கேளு, அங்கிருக்கும் டால்ஃபின்கள் 275 00:20:26,392 --> 00:20:29,646 புரியுதா, பட்டினி போடப்பட்டு கொடுமைப்படுத்தப் படுகின்றன. 276 00:20:31,147 --> 00:20:32,815 நேர்மையாக சொன்னா, அவை ரொம்ப வெறுப்பில் இருக்கு. 277 00:20:33,983 --> 00:20:37,278 தெரியுமா, எனக்கு அதை வெளிக்கொண்டு வர விருப்பம். 278 00:20:37,362 --> 00:20:39,447 மக்கள் அதற்கு வரவேற்பளிப்பார்கள் என்று நினைக்கிறேன். 279 00:20:40,615 --> 00:20:43,368 நீ தான் ஓஷன்லாண்டின் இலையுதிர்கால 280 00:20:43,451 --> 00:20:45,453 திருவிழாவின் நாயகன் என்று நினைவிருக்குமே. 281 00:20:45,536 --> 00:20:47,872 ஆம், சரி, அதை கைவிட்டு விடலாம், சரியா? 282 00:20:47,956 --> 00:20:49,248 எப்படியும் அந்த ஒப்பந்தம் சகிக்கல. 283 00:20:49,332 --> 00:20:50,750 இல்லை, முடியாது. 284 00:20:50,833 --> 00:20:52,085 கேளு, நான் விரும்புகிறேன், அதாவது, 285 00:20:52,168 --> 00:20:54,462 அதிக பயனுள்ளதாக செய்ய விரும்புகிறேன். 286 00:20:56,464 --> 00:20:58,883 -சரி. புரியுது. சரி. -சரியா? சரி. 287 00:21:00,259 --> 00:21:01,260 டீப். 288 00:21:02,679 --> 00:21:03,972 உனது பலத்தை முன்னிலைப்படுத்து. 289 00:21:19,654 --> 00:21:22,281 ஹேய், கண்ணே, ஹேய். 290 00:21:29,372 --> 00:21:30,540 என்ன செய்தாய்? 291 00:21:31,916 --> 00:21:33,584 என்ன பேசுகிறாய்? 292 00:21:33,668 --> 00:21:36,045 கலவை வியைப் பற்றி யாரிடம் சொன்னாய்? 293 00:21:37,505 --> 00:21:40,299 யாரிடமும் சொல்லல. ஏன்? என்ன... 294 00:21:40,383 --> 00:21:44,345 ஏன்னா என்னிடம் அது இருக்குன்னு என்னைத் தவிர உனக்கு தான் தெரியும், 295 00:21:44,804 --> 00:21:46,139 நான் அதை எங்கிருந்து கொண்டு வருகிறேன். 296 00:21:46,806 --> 00:21:50,893 நான் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. நீ வீணாக பயப்படுகிறாய். 297 00:21:50,977 --> 00:21:52,937 வேறு யாரிடம் சொன்னாய்? 298 00:21:59,235 --> 00:22:00,570 என்கிட்டே கத்தாதே. 299 00:22:01,738 --> 00:22:03,239 நான் சொல்வதைக் கேளு. 300 00:22:04,907 --> 00:22:06,159 உட்காரு. 301 00:22:17,003 --> 00:22:19,464 பாரு, உன்னை நேசிக்கிறேன். அது உனக்கு தெரியும். 302 00:22:20,131 --> 00:22:22,216 நாம் சந்தித்த முதல் முறையிலிருந்து உன்னை நேசிக்கிறேன்... 303 00:22:22,300 --> 00:22:23,468 நிஜமாவா? 304 00:22:23,968 --> 00:22:28,598 நீ பந்தயத்தில் பேசியதைக் கேட்டேன். காதலி இல்லையா? பெண்கள் விண்ணப்பிக்கலாமா? 305 00:22:28,681 --> 00:22:33,186 அட, நான் அவற்றை சொல்லியாகணும். உனக்கு தெரியும். என்னை சொல்ல வைக்கிறாங்க. 306 00:22:34,187 --> 00:22:35,354 அது என் அடையாளம். 307 00:22:39,317 --> 00:22:40,485 இங்கே வா. 308 00:22:42,111 --> 00:22:43,196 இங்கே வா. 309 00:22:49,577 --> 00:22:51,329 நீ மறுபடியும் போதைக்கு அடிமையானது நினைவிருக்கா? 310 00:22:52,205 --> 00:22:54,624 -ஆம். -நான் இருந்து உன் முதுகை தடவினேனே? 311 00:22:55,416 --> 00:22:57,376 உனது வாந்தியை சுத்தம் செய்தேனே? 312 00:22:59,879 --> 00:23:02,006 உனக்காக எப்போதும் இருப்பேன். 313 00:23:07,345 --> 00:23:08,721 தெரியும், கண்ணே. 314 00:23:10,932 --> 00:23:12,433 தயவுசெய்து. 315 00:23:13,976 --> 00:23:15,561 நீ யாரிடம் சொன்னாய் என்று சொல்லு. 316 00:23:16,979 --> 00:23:19,107 ஏன்னா நாம் மிகப்பெரிய சிக்கலில் இருக்கோம். 317 00:23:26,447 --> 00:23:28,199 நான் யாரிடமும் சொல்லவில்லை. 318 00:23:45,550 --> 00:23:48,136 எப்படியோ, நீ ஒரு பையை எடுத்து வைக்க வேண்டும், 319 00:23:48,219 --> 00:23:49,679 உனக்கு தேவையானதை எடுத்துக்கொள். 320 00:23:50,596 --> 00:23:51,848 ஏன்? நாம் எங்கு போகிறோம்? 321 00:23:52,557 --> 00:23:54,308 நான் இதை பார்த்துக் கொள்கிறேன். 322 00:23:54,392 --> 00:23:56,352 ஆனால் அதுவரை, உன்னை பாதுகாப்பான இடத்தில் வைக்கணும், 323 00:23:56,435 --> 00:23:58,521 ஹோம்லாண்டருக்கு தெரிவதற்கு முன். 324 00:24:00,857 --> 00:24:02,191 உன்னை நேசிக்கிறேன். 325 00:24:07,864 --> 00:24:09,157 நானும் உன்னை நேசிக்கிறேன். 326 00:24:36,517 --> 00:24:38,352 கை நறுவிசு? கால் நறுவிசு? சிறப்பு சலுகை உண்டு. 327 00:24:45,109 --> 00:24:47,778 சிரிப்பூட்டும் டால்ஃபின்ஸ் ஆஹாய் திருவிழா, 328 00:24:47,862 --> 00:24:50,448 இந்த இரு செல்லங்களுடன். 329 00:24:50,531 --> 00:24:53,492 அதனால், இந்த இலையுதிர்காலத்தில், டீப்புடன். 330 00:24:53,576 --> 00:24:54,493 ஓஷன்லாண்டுக்கு போங்கள். 331 00:24:55,203 --> 00:24:56,746 சரி, உன்னிடம் என்ன இருக்குன்னு பார்ப்போம். 332 00:25:11,677 --> 00:25:13,846 நீ சொன்னாய், முன்பு பவுல் செய்துள்ளாய் என்று? 333 00:25:14,805 --> 00:25:17,141 ஆம், எனக்கு கொஞ்சம் பயிற்சி விட்டு போயிடுச்சு. நீ? 334 00:25:17,225 --> 00:25:20,811 ஆம், இங்கே, நிஜத்தில். வாழ்க்கை முழுதும் வந்திருக்கேன். 335 00:25:21,896 --> 00:25:24,774 என் முதல் முத்தம் 14 வயதில் ஆண்கள் கழிவறையில் ஏமி சீலர் உடன். 336 00:25:25,107 --> 00:25:26,442 ரொம்ப காதல் நிறைந்ததா இருந்தது. 337 00:25:27,109 --> 00:25:30,863 ஆம். நிச்சயமாக அவளது முதல் முத்தத்தை அப்படி கற்பனை செய்திருப்பாள். 338 00:25:30,947 --> 00:25:33,241 மன்னிக்கவும், உனது முதல் முத்தம் எங்கே நடந்தது? 339 00:25:33,324 --> 00:25:35,868 பள்ளி இறுதி விழாவில். அபாரமாக இருந்தது. 340 00:25:37,703 --> 00:25:41,707 இரு, பள்ளி இறுதி விழாவா? அப்போ, உனக்கு 18 வயதில் தான் முதல் முத்தமா? 341 00:25:43,960 --> 00:25:46,963 நீ அதைப்பற்றி நகைச்சுவை செய்யவில்லை, அது நல்லது, அருமையானது. 342 00:25:47,380 --> 00:25:51,050 ஆம், எனது குழந்தைப்பருவம் கடவுளை சுற்றி இருந்தது. 343 00:26:00,851 --> 00:26:02,228 என்னை பிறகு அவன் வெளியே போக கேட்கல. 344 00:26:02,311 --> 00:26:04,772 மன்னிக்கணும், என்ன சொன்னாய்? 345 00:26:05,856 --> 00:26:07,775 இல்லை, பள்ளி இறுதி விழா பற்றித்தான். 346 00:26:09,068 --> 00:26:11,529 -என்ன அது? அதற்கு என்ன? -ஒன்றுமில்லை, அது... அது கிறுக்குத்தனம். 347 00:26:13,322 --> 00:26:15,658 நான்... நான் ஒரு பவுல் போடப் போகிறேன். 348 00:26:21,914 --> 00:26:23,958 அப்போ, ட்ரான்ஸ்லூசென்ட் எப்படிப் பட்டவன்? 349 00:26:25,584 --> 00:26:27,295 அது உரையாடலை அப்படியே திசை மாற்றியது. 350 00:26:28,004 --> 00:26:29,422 ஆம், திசை மாற்றியது. வருந்துகிறேன். 351 00:26:29,505 --> 00:26:30,965 மன்னிக்கணும், ஆம், என் தலைக்குள் உதித்தது. 352 00:26:31,048 --> 00:26:32,383 சின்ன வயதில், அவனை மிகவும் பிடிக்கும். 353 00:26:32,466 --> 00:26:35,219 மற்றவர்கள் மோசமானவர்கள் என்றாய், அவனும் மோசமானவனா? 354 00:26:36,220 --> 00:26:41,142 சரி, அதாவது, தனிமை மற்றும் எல்லைகளை மதிக்க மாட்டான், அதை சொல்லுவேன். 355 00:26:42,435 --> 00:26:47,189 மற்றபடி, தனியாள் போல. தனது ஓய்வு நேரத்தை பெரும்பாலும் தனது மகனுடன் செலவிடுவான். 356 00:26:50,401 --> 00:26:51,610 அவனுக்கு மகன் இருக்கானா? 357 00:26:51,694 --> 00:26:54,071 ஆம், ஆரம்பகால விவாகரத்து என்று நினைக்கிறேன். 358 00:26:54,155 --> 00:26:58,367 அவனுக்கு 10 வயது இருக்கும். அவன் பெயர் என்னமோ ஹன்ட்டர் அல்லது மாவெரிக். 359 00:27:27,438 --> 00:27:28,439 பரவாயில்லை. 360 00:28:05,935 --> 00:28:08,062 சரி, அனைவருக்கும், எல்லாம் முடிந்தது. 361 00:28:08,854 --> 00:28:11,482 எல்லாம் பாதுகாப்பாக இருக்கு. உங்களுக்கு ஒன்றும் ஆகாது. 362 00:28:12,775 --> 00:28:14,235 நன்றி, ஹோம்லாண்டர்! 363 00:28:15,277 --> 00:28:16,362 இல்லை, இல்லை... 364 00:28:19,031 --> 00:28:23,160 இப்போ. நீங்க. நீங்க தான் தப்பிச்சீங்க. 365 00:28:23,744 --> 00:28:25,037 நீ நலம்தானே, அன்பே? 366 00:28:25,121 --> 00:28:26,580 -சரிதானே? நல்லது. -ஆம். 367 00:28:27,415 --> 00:28:29,583 நீங்கள் அருமையானவர்கள். அபாரம். 368 00:28:29,667 --> 00:28:30,626 மேவ் அபாரமானவள்! 369 00:28:30,709 --> 00:28:33,546 ஹேய், க்வீன் மேவுக்கு ஒரு சுற்று கைதட்டல் கொடுப்போம். 370 00:28:35,256 --> 00:28:36,549 உங்களை நேசிக்கிறோம், க்வீன் மேவ். 371 00:28:40,010 --> 00:28:41,053 கேப்டன்? 372 00:28:45,349 --> 00:28:46,434 நிறுத்து. நில். 373 00:28:47,059 --> 00:28:49,437 மெதுவாக, பையா. மெதுவாக. 374 00:28:50,646 --> 00:28:52,690 அதோ. அமைதியாகு. 375 00:29:04,452 --> 00:29:05,744 விமான கட்டுப்பாட்டு பிரிவு! 376 00:29:07,621 --> 00:29:10,332 துண்டிக்கப்பட்டது. உன்னால் விமானத்தை இயக்க முடியுமா? 377 00:29:11,792 --> 00:29:13,169 என்னால் முடிந்தாலும் பயனில்லை. 378 00:29:16,755 --> 00:29:18,048 நாம் என்ன செய்வது? 379 00:29:27,850 --> 00:29:29,560 எல்லாம் நலம்தானே? 380 00:29:29,643 --> 00:29:30,644 உன் இருக்கைக்கு திரும்பிப் போ. 381 00:29:30,728 --> 00:29:32,354 சரி, மக்களே. அமைதியாக இருங்கள். 382 00:29:32,438 --> 00:29:35,566 உங்களது இருக்கைகளில் இருங்கள். எல்லாம் கட்டுப்பாட்டில் இருக்கு. 383 00:29:37,067 --> 00:29:38,694 நீ வெளியே போக வேண்டும். விமானத்தை தூக்க வேண்டும். 384 00:29:38,777 --> 00:29:40,070 விமானத்தை தூக்கணுமா? 385 00:29:40,154 --> 00:29:43,073 எப்படி? மேல் ஏறி நிற்க ஒன்றுமில்லை. வெறும் காற்று தான். 386 00:29:43,157 --> 00:29:45,576 தெரியல, அதை நோக்கிப் பற, நேராக்கு. 387 00:29:45,659 --> 00:29:48,996 அந்த மாதிரி வேகத்தில், விமானம் தலைகீழாக கவிழும் 388 00:29:49,079 --> 00:29:50,998 அல்லது எஞ்ஜினில் துளையிட்டு விடுவேன்... 389 00:29:56,629 --> 00:30:00,633 அது பெரிய தள்ளாட்டம். எல்லாம் நலம்தான். கவலைப்பட வேண்டாம். 390 00:30:04,595 --> 00:30:06,430 சரி. சரி. 391 00:30:06,514 --> 00:30:09,183 நீ ஒவ்வொருவராக கூட்டிக்கொள். அவர்களை தரைக்கு கொண்டு போய் சேர்த்துவிடு... 392 00:30:09,808 --> 00:30:12,853 அப்புறம் என்ன? 123 முறை திரும்பி வரணுமா? 393 00:30:13,354 --> 00:30:15,064 மேவ். யோசி. 394 00:30:18,859 --> 00:30:19,902 நமது வேலை இங்கு முடிந்தது. 395 00:30:21,779 --> 00:30:23,405 -தயவுசெய்து. -எல்லாம் நலம்தான், நண்பர்களே. 396 00:30:23,489 --> 00:30:25,616 எல்லாம் நலம்தான். நாம் நல்லாதான் இருக்கோம். 397 00:30:25,699 --> 00:30:26,784 இருங்க, எங்களை விட்டு போறீங்களா? 398 00:30:26,867 --> 00:30:29,119 இல்லை. இல்லவே இல்லை. நான் பின்பக்கத்தில் எதையோ பார்க்கிறேன். 399 00:30:31,372 --> 00:30:32,957 ஓ, கடவுளே. போறீங்க. நம்மை விட்டு போறாங்க. 400 00:30:33,040 --> 00:30:34,250 நான் போகவில்லை என்று சொன்னேன். 401 00:30:37,169 --> 00:30:39,547 ஹோம்லாண்டர், எங்களை காப்பாற்ற போகிறீர்களா? 402 00:30:39,964 --> 00:30:43,551 அன்பே, நிச்சயமாக உங்களை காப்பாற்ற போகிறேன். நிச்சயமாக. 403 00:30:43,634 --> 00:30:46,387 இங்குள்ள அனைவரையும் காப்பாற்றுவேன். கவலைப்படாதே. 404 00:30:48,138 --> 00:30:50,224 சரியாகிவிடும். சரியாகிவிடும். 405 00:30:51,725 --> 00:30:53,018 மேடம், வாங்க. 406 00:30:53,310 --> 00:30:55,020 -உட்காருங்க -மேவ்! 407 00:31:15,207 --> 00:31:19,128 சரி, நீங்கள் இருவரும். உங்கள் முகமூடிகளை கழட்டுங்கள். வாங்க. 408 00:31:20,546 --> 00:31:21,755 இப்போ. 409 00:31:22,548 --> 00:31:23,799 எங்களை தயவுசெய்து காப்பாற்றுங்கள்! 410 00:31:26,260 --> 00:31:27,595 -இருவரையும் கூட்டிச்செல். -முடியாது. 411 00:31:27,678 --> 00:31:28,929 -இவர்கள் இருவரை மட்டும். -முடியாது. 412 00:31:29,013 --> 00:31:31,890 என்ன, மற்றவர்களை சாக விட்டோம் என்று அவர்கள் உலகத்திற்கு சொல்வதற்கா? 413 00:31:31,974 --> 00:31:34,226 -சொல்வதை செய்! -இல்லை, மேவ், முடியாது... 414 00:31:34,310 --> 00:31:37,313 நீங்கள் பின்னால் போங்கள், அனைவரும், பின்னால் போங்கள். 415 00:31:37,396 --> 00:31:40,232 நீங்கள் பின்னால் போகவில்லை என்றால் லேசர் பாய்ச்சி விடுவேன், நாசமாகட்டும்! 416 00:31:40,316 --> 00:31:42,234 உங்கள் ஒவ்வொருவரையும் லேசரால் தாக்குவேன்! 417 00:31:43,319 --> 00:31:44,570 பின்னால் போங்கள். 418 00:31:45,738 --> 00:31:46,864 வா போகலாம். 419 00:31:48,324 --> 00:31:49,950 இல்லை, இருங்கள், வேண்டாம்! 420 00:31:50,034 --> 00:31:51,118 தயவுசெய்து இருங்கள்! 421 00:31:51,201 --> 00:31:52,286 -மன்னியுங்கள். -கூட்டிப்போங்க. 422 00:31:52,369 --> 00:31:55,581 -தயவுசெய்து! -தயவுசெய்து எங்களை விட்டு போகாதீங்க, மேவ். 423 00:31:55,664 --> 00:31:56,832 மேவ்! 424 00:31:57,583 --> 00:31:58,709 அவர்களுடன் இறந்துவிடாதே. 425 00:32:01,754 --> 00:32:02,838 மேவ். 426 00:32:02,921 --> 00:32:04,590 -உனக்கு என்ன பிரச்சனை? -மேவ். 427 00:32:05,341 --> 00:32:07,843 மன்னிக்கணும். மிகவும் வருந்துகிறேன். 428 00:32:07,926 --> 00:32:11,013 தயவுசெய்து கூட்டிப் போங்க. என் மகளை கூட்டிப் போங்க! 429 00:32:12,931 --> 00:32:14,266 ஹோம்லாண்டர்? 430 00:32:14,350 --> 00:32:17,311 தயவுசெய்து! அவளை கூட்டிப் போங்க. கூட்டிப் போங்க! 431 00:32:47,883 --> 00:32:49,385 இதைப் பார். 432 00:32:50,052 --> 00:32:51,178 கொலைப்பிரிவு. 433 00:32:51,261 --> 00:32:52,596 சீக்கிரம் வந்துட்டீங்களே. 434 00:32:52,680 --> 00:32:54,181 ஆம், ரேடியோவில் கேட்டது. 435 00:32:54,264 --> 00:32:55,432 என்ன ஆச்சு உன் பேசும் பாணிக்கு? 436 00:32:55,849 --> 00:32:56,934 உன் பேசும் பாணிக்கு என்ன ஆச்சு? 437 00:32:58,268 --> 00:32:59,853 அவளை இங்கு முன்பு பாத்திருக்கீங்களா? 438 00:33:01,313 --> 00:33:03,023 ஒரு வருடம் முன்பு பார்த்திருக்கலாம். 439 00:33:07,778 --> 00:33:08,987 கும்பல் கொலை. 440 00:33:11,365 --> 00:33:12,616 கும்பல் கொலையா? 441 00:33:13,367 --> 00:33:14,868 உன்னிடம் யார் சொன்னது? 442 00:33:15,327 --> 00:33:16,578 அவருடன் நான் வாதம் செய்ய மாட்டேன். 443 00:33:17,705 --> 00:33:18,706 நான் அதை விசாரிக்கிறேன். 444 00:33:20,416 --> 00:33:21,500 மன்னிக்கணும். 445 00:33:24,211 --> 00:33:25,462 வந்தனங்கள், நண்பா. 446 00:33:45,065 --> 00:33:48,360 ஏ-ட்ரெய்ன் என்னை போன வாரம் பார்த்தான். என்னை அடையாளம் கண்டுபிடிச்சிருந்தால்? 447 00:33:48,444 --> 00:33:49,862 அவன் உன்னை பார்க்கவில்லை. 448 00:33:51,113 --> 00:33:53,490 கேளு, சொல்வது உனக்கு எளிது, புட்சர். ஆனால் எனக்கு குடும்பம் இருக்கு. 449 00:33:54,616 --> 00:33:55,701 எனக்கு இல்லையா? 450 00:33:57,828 --> 00:34:02,374 பாரு, ஒரு கும்பல் கொலைக்காக சூப்பர்ஹீரோவை வாட் அனுப்பாது. சரியா? 451 00:34:02,458 --> 00:34:03,751 அவன் அந்த பெண்ணை தேடி வந்தான். 452 00:34:03,834 --> 00:34:05,544 ஹேய், நண்பா, இறந்தவள் யார்? 453 00:34:06,462 --> 00:34:10,132 ரொபெர்ட்டா சோ. நான்கு குழந்தைகளின் தாய், மெக்ஸிக்கன் உணவை விரும்புபவள். 454 00:34:10,215 --> 00:34:13,385 பசிஃபிக் நாடுகளிலிருந்து நிறைய மக்களை சட்டப்புறம்பாக குடியேற்றியவள். 455 00:34:13,510 --> 00:34:14,803 நமது பெண்ணைப் போல. 456 00:34:14,887 --> 00:34:16,847 ஏ-ட்ரெய்ன், எனக்கு ஒரு செல்ஃபி கிடைக்குமா? 457 00:34:21,518 --> 00:34:24,271 அவன் மன்ஹாட்டன் முழுக்க 30 நிமிடங்களுக்குள் தேடிவிடுவான். 458 00:34:24,354 --> 00:34:26,356 நமக்கு முன் அவளைக் கண்டுபிடித்து விடுவான். 459 00:34:26,440 --> 00:34:28,984 இல்லை, மாட்டான். அவள் எங்கு போகிறாள் என்று எனக்கு தெரியும். 460 00:34:29,943 --> 00:34:31,737 பென் ரயில் நிலையம். 461 00:34:32,321 --> 00:34:35,157 அவள் பின்னோக்கி செல்கிறாள். சொந்த ஊருக்கு போக முயற்சிக்கிறாள். 462 00:34:39,745 --> 00:34:43,582 நான் இஸீக்கியெல், என்னுடன் நீங்கள் பிலீவ் கண்காட்சியில் இணைய வேண்டும், 463 00:34:43,665 --> 00:34:47,795 ஜூன் 6 மற்றும் 10, கண்காட்சி திடலில். நற்குடிமகனின் அரவணைப்பு அமைப்பு சார்பில். 464 00:34:47,878 --> 00:34:49,671 இசை இருக்கும். 465 00:34:49,755 --> 00:34:50,589 வழிபாடு இருக்கும் 466 00:34:50,672 --> 00:34:51,632 உணவு ட்ரக்குகள் 467 00:34:51,715 --> 00:34:54,009 மேலும், ஆம், 468 00:34:54,092 --> 00:34:56,261 கிறிஸ்து. நம்முடன் இணைபவர்கள்... 469 00:34:56,345 --> 00:34:57,221 ஹோம்லாண்டர் 470 00:34:57,304 --> 00:34:58,263 ஸ்டார்லைட் 471 00:34:58,347 --> 00:34:59,556 த செவனில் இருந்து. 472 00:34:59,640 --> 00:35:01,266 -ஹேய். -எனக்கு தெரியும். 473 00:35:01,350 --> 00:35:03,727 பாரு, நான் மக்களை மதமாற்றம் செய்யப் போவதில்லை. 474 00:35:03,811 --> 00:35:07,648 நான் சும்மா... பதின்ம வயதினருக்கு முகாம் செய்கிறேன். மேலும்... 475 00:35:08,232 --> 00:35:10,901 கவெனன்ட் ஹவுஸுக்கு எனது தோற்றக் கட்டணத்தை தானம் செய்கிறேன். 476 00:35:11,443 --> 00:35:15,030 நகரத்திலேயே நீ தான் மிகவும் நல்லவள். 477 00:35:15,113 --> 00:35:16,198 இல்லை, நிஜமாக. 478 00:35:16,281 --> 00:35:18,784 மற்ற நல்லவர்கள் ஒவ்வொருவரும் ஒழிந்து வீட்டுக்கு போகலாம். 479 00:35:19,701 --> 00:35:21,453 உண்மைதான், அதனால் தான் செய்கிறேன். 480 00:35:21,537 --> 00:35:23,497 வெறித்தனமான, சொந்த புகழுக்காக. 481 00:35:29,837 --> 00:35:32,923 -நீ நலம்தானே? -ஆம், ஆமாம், ஆம். 482 00:35:36,677 --> 00:35:38,929 நீ கொஞ்சம்... 483 00:35:39,638 --> 00:35:41,223 தெரியல. 484 00:36:04,496 --> 00:36:05,497 சரி. 485 00:36:07,958 --> 00:36:10,961 உண்மையை சொல்றேன். நான் நேர்மையாக சொல்லணும்னா, 486 00:36:12,880 --> 00:36:14,548 உன் மேல் கொஞ்சம் சந்தேகப் படுகிறேன். 487 00:36:15,883 --> 00:36:16,925 அப்படியா? 488 00:36:17,634 --> 00:36:21,138 ஆம், நீ அதிகம் பவுல் போடுவாய் என்று சொல்கிறாய், 489 00:36:21,221 --> 00:36:23,891 அதுவும், உன்னிடம் அபார சக்திகளும் இருக்கு, 490 00:36:23,974 --> 00:36:26,476 ஆனாலும் நீ ரொம்ப மோசமாக பவுல் செய்கிறாய். 491 00:36:29,479 --> 00:36:30,856 என்ன நடக்கதுன்னு நினைக்கிறேன் தெரியுமா? 492 00:36:30,939 --> 00:36:32,816 நீ வேண்டுமென்றே மோசமாக போடுகிறாய் 493 00:36:32,900 --> 00:36:35,986 என்னை முதல் சந்திப்பிலேயே உன்னை வெறுக்க வைக்கக் கூடாது என்பதற்காக. 494 00:36:38,530 --> 00:36:41,283 எனது ஈகோவை வளர்ப்பதை விட்டு உனது உண்மையான திறமையை வெளிக் காட்டுவாயா? 495 00:36:50,834 --> 00:36:52,085 அட நாசமே. 496 00:36:55,005 --> 00:36:56,506 இப்போ, அதுதான் அடி. 497 00:36:59,009 --> 00:37:00,218 ஆம். 498 00:37:02,971 --> 00:37:03,972 8ஆம் தெரு சப்வே 499 00:37:04,056 --> 00:37:06,099 ஆம், அது அருமை, பா. நல்ல உளவு. நன்றி. 500 00:37:07,392 --> 00:37:09,019 சரி, எங்களை தவிக்க விடாதே. 501 00:37:09,102 --> 00:37:12,481 சரி, டிஷான் எனது தெரு நண்பன், ஆனா இப்போது பைகளை கொண்டு சேர்க்கிறான். 502 00:37:12,564 --> 00:37:14,316 சரி, எனக்கு அந்த கதையில் ஈடுபாடில்லை. 503 00:37:14,399 --> 00:37:15,525 கணக்கு எண்ணை சோதனை செய்தான், 504 00:37:15,609 --> 00:37:18,820 கலவை வி இருந்த பெட்டி நற்குடிமகனின் அரவணைப்பு அமைப்பிலிருந்து வந்தது. 505 00:37:18,904 --> 00:37:20,238 இஸீக்கியெலின் சூப்பர்ஹீரோ தொண்டுநிறுவனமா? 506 00:37:21,573 --> 00:37:25,452 அந்த மதப் பிரச்சாரம் செய்யும் கேடுகெட்டவனுக்கு இதில் என்ன தொடர்பு? 507 00:37:25,535 --> 00:37:27,371 நாம் அந்த பெண்ணை கண்டுபிடித்தால், அறிவோம். 508 00:37:28,288 --> 00:37:29,706 ஆம். 509 00:37:29,790 --> 00:37:33,043 சரி, நடைமேடைகள் கீழ்த்தளம். நான் மாடிக்கு போகிறேன். 510 00:37:33,126 --> 00:37:34,503 அவளைக் கண்டால், ஃப்ரென்ச்சியிடம் போய், 511 00:37:34,586 --> 00:37:36,213 வாயுவை பயன்படுத்தும் வரை அவளுடன் இருங்க, சரியா? 512 00:37:49,559 --> 00:37:50,727 இப்போது பார்க்கிறீர்கள் என்றால்... 513 00:37:50,811 --> 00:37:52,104 கடத்தப்பட்ட விமானம் 37 காணாமல் போனது 514 00:37:52,187 --> 00:37:54,481 ...கடத்தப்பட்ட விமானம் 37இன் அனைத்து ரேடார், செயற்கைக்கோள் படங்களை 515 00:37:54,564 --> 00:37:57,651 அதிகாரிகள் இழந்துவிட்டதால், மோசமான விபத்தாக இருக்கும் என்று அஞ்சுகின்றனர். 516 00:37:57,734 --> 00:38:01,238 அட்லான்ட்டிக்கை தாண்டி விமானப் பாதையில் தேடுதல் விமானங்கள் பறக்க தொடங்கியுள்ளன. 517 00:38:53,331 --> 00:38:55,500 தொடர்புகள் - டபுள்யூ. புட்சர் 518 00:38:58,336 --> 00:39:00,422 தொழில்நுட்ப கடை 519 00:39:06,219 --> 00:39:07,220 இல்லை, இல்லை. 520 00:39:11,058 --> 00:39:12,350 பரவாயில்லை. 521 00:39:13,185 --> 00:39:14,436 போய்விட்டது. 522 00:39:16,104 --> 00:39:17,272 போய்விட்டது, தெரியுதா? 523 00:39:19,316 --> 00:39:20,567 நான் உன்னை காயப்படுத்த வரவில்லை. 524 00:39:27,449 --> 00:39:28,742 உனக்கு இசை பிடிக்குமா? 525 00:39:30,494 --> 00:39:31,703 சரி, எனக்கும் பிடிக்கும். 526 00:39:34,831 --> 00:39:37,626 நான் யாரிடமும் கூறாத ரகசியத்தை உன்னிடம் கூறட்டுமா? 527 00:39:44,216 --> 00:39:45,926 நான் சிறுவனாக இருந்தபோது, 528 00:39:46,718 --> 00:39:48,512 என் அம்மாவிடமிருந்து என்னை என் அப்பா கடத்தினார். 529 00:39:50,388 --> 00:39:53,391 மார்செய்யில். நடு இரவில், வீட்டுக்குள் நுழைந்து, என்னை கடத்தினார். 530 00:39:53,683 --> 00:39:57,229 பல வருடங்களுக்கு என்னை அவருடன் வைத்திருந்தார். விடுதிக்குப் பின் விடுதி. 531 00:39:58,688 --> 00:40:00,816 சில இரவுகளுக்கு ஒரு முறை, என்னை நடப்பதற்கு அழைத்து சென்று, 532 00:40:02,776 --> 00:40:05,112 சிகரெட்டை புகைத்து, என்னை நேசிப்பதாக சொல்வார். 533 00:40:05,195 --> 00:40:06,196 பிறகு... 534 00:40:13,036 --> 00:40:15,205 நான் பலமுறை தப்பி ஓட முயன்றேன். 535 00:40:20,752 --> 00:40:23,130 பேருந்துகள், ரயில்கள் எல்லாவற்றிலும் ஏறினேன், 536 00:40:23,213 --> 00:40:25,757 மார்செய்க்கு திரும்பிச் செல்ல எதையும் செய்ய முயன்றேன். 537 00:40:28,051 --> 00:40:29,636 அம்மாவை அடைய. 538 00:40:31,638 --> 00:40:33,473 ஆனால், ஒவ்வொரு முறையும் என்னை பிடித்துவிடுவார். 539 00:40:37,936 --> 00:40:40,188 அதனால், வீட்டுக்கு போக விரும்புவது எப்படியிருக்கும் என்று தெரியும். 540 00:40:47,904 --> 00:40:49,906 தெரியுதா? உனது ரகசியம் எனக்கு தெரியும். 541 00:40:53,034 --> 00:40:54,578 நீ மோசமானவள் அல்ல. 542 00:40:56,621 --> 00:40:58,582 பயந்திருப்பவள். 543 00:41:06,339 --> 00:41:08,008 என்னை உனக்கு உதவ விடு. 544 00:41:33,366 --> 00:41:35,994 இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை. 545 00:41:36,119 --> 00:41:38,413 ஃப்ரென்ச்சி, அவளைப் பார்த்தாயா? எந்த வழியாகப் போனாள்? 546 00:41:38,496 --> 00:41:39,748 -தெரியல. -அவள் மீது வாயுவை வீசினாயா? 547 00:41:39,831 --> 00:41:40,957 -இல்லை. -ஏன் இல்லை? 548 00:41:41,041 --> 00:41:42,334 அது சரியாக படவில்லை. 549 00:41:42,417 --> 00:41:43,793 சரியாக படவில்லை என்று திட்டத்தை மீறினாயா? 550 00:41:43,877 --> 00:41:45,253 மன்னிச்சிடு, சரியா? 551 00:41:49,674 --> 00:41:53,178 ஷான் ஜக்காவ்ஸ்கி. தடகள வீரன். 552 00:41:53,929 --> 00:41:58,516 அவன் மீது ரொம்ப ஆசையோடு இருந்தேன், கடைசியில் விருந்துக்கு வர சொன்னான். 553 00:41:58,600 --> 00:42:02,312 எனது தலைமுடி அழகாக இருந்தது, கைகளை பிடித்துக் கொண்டோம், கச்சிதமாக இருந்தது. 554 00:42:02,395 --> 00:42:04,356 பிறகு, திடீரென்று, ஒரு மேல்வகுப்பு மாணவன் ஷானை தள்ளினான், 555 00:42:04,439 --> 00:42:07,525 பிறகு அவனை அடித்தான், அதனால் நான் குறுக்கிட்டேன். 556 00:42:07,609 --> 00:42:08,818 அவனை அடித்து நொறுக்கினேன். 557 00:42:09,611 --> 00:42:11,154 உனக்கு நல்லது. 558 00:42:11,238 --> 00:42:13,323 -ஷான் எப்படி நன்றி சொன்னான்னு தெரியணுமா? -ஆம். 559 00:42:13,406 --> 00:42:16,493 என்னிடம் அவன் பிறகு பேசவேயில்லை. ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 560 00:42:18,203 --> 00:42:19,579 அப்போது தான் கற்றேன், 561 00:42:19,663 --> 00:42:21,957 உனக்கு பிடித்த ஆணிடம் உனது பலத்தை காட்டாதே என்று. 562 00:42:24,251 --> 00:42:28,129 சரி, உண்மையை சொல்லணும்னா, ஷான் ஜக்காவ்ஸ்கி ஆண்மை இல்லாதவன். 563 00:42:33,426 --> 00:42:36,263 நான் பவுலிங்க் மட்டுமல்லாமல் அனைத்திலும் உன்னை விட 564 00:42:37,138 --> 00:42:39,307 சிறந்தவளாக இருப்பது உன்னை கவலையாக்குதா? 565 00:42:40,058 --> 00:42:41,851 உன்னை வைத்து தண்டாலும் எடுப்பேனே? 566 00:42:41,935 --> 00:42:43,478 ஓ, கடவுளே. அது மிரட்டலா, உறுதிமொழியா? 567 00:42:45,063 --> 00:42:47,232 இல்லை, இல்லை, நான்... 568 00:42:48,275 --> 00:42:51,820 அருமையான விஷயம் என்று நினைக்கிறேன். நிஜமான நீ. 569 00:42:57,409 --> 00:42:59,035 கெட்சப் சாப்பிடுகிறாய். 570 00:43:02,080 --> 00:43:04,040 என்ன? உனக்கு பிடிக்காதா? 571 00:43:04,666 --> 00:43:06,042 உனக்கு இஷ்டமில்லையா? 572 00:43:16,136 --> 00:43:18,513 எனது இடத்தை பிடித்து வை. சீக்கிரம் வந்திடுவேன். 573 00:43:53,048 --> 00:43:55,050 -ஹேய். -ஹேய். 574 00:43:59,846 --> 00:44:01,306 அப்போ, அவள் எங்கே, ஃப்ரென்ச்சி? 575 00:44:01,389 --> 00:44:03,641 திடீரென்று நீ பைத்தியக்கார பெண்ணுடன் பேசும் திறனாளி ஆகி விட்டதால். 576 00:44:03,725 --> 00:44:06,603 சப்வேயில் இருப்பாள். சொந்த ஊருக்கு செல்லும் ரயிலை தேடுகிறாளோ. 577 00:44:06,686 --> 00:44:08,271 அப்படியா? எப்படி கற்பனையாக பொய் சொல்கிறாய்? 578 00:44:08,355 --> 00:44:10,065 உன் குடும்ப வரலாற்றை அவிழ்த்து விடட்டுமா? 579 00:44:10,148 --> 00:44:13,610 கேளு, நீ அவளைத் தொலைத்தாய், டா. நமக்கான உத்தரவுகளை நாம் பின்பற்ற வேண்டும். 580 00:44:13,693 --> 00:44:15,195 நாம் பணியாளர்கள், ஒருவரை ஒருவர் நம்புபவர்கள். 581 00:44:15,278 --> 00:44:18,448 ஆனா நீ ஏதோ போதைப்பொருள் உளறல் செய்கிறாய். 582 00:44:18,531 --> 00:44:21,618 வெள்ளைக்கார முட்டாள் ஹ்யூயி கூட உன்னை விட நல்லா வேலை செய்றான். 583 00:44:21,701 --> 00:44:24,287 ரொம்ப திமிர் பிடிச்சவங்களுக்கு புரியாது என்று எனக்கு தெரியும்... 584 00:44:24,371 --> 00:44:26,039 சரி, அப்போ. புரியவைக்க உதவு, ஃப்ரென்ச்சி. 585 00:44:26,122 --> 00:44:27,957 மாலரி உன்னை லாம்ப்லைட்டரை பின்தொடரசெய்த இரவு என்ன ஆனது? 586 00:44:28,041 --> 00:44:29,125 போதும். 587 00:44:29,209 --> 00:44:31,378 மாலரி நமது முதலாளி. 588 00:44:31,461 --> 00:44:34,297 நமக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டன. அவற்றை நீ பின்பற்றியிருக்க வேண்டும். 589 00:44:34,381 --> 00:44:37,509 நீ லாம்ப்லைட்டரை பின் தொடர்ந்திருக்கணும், ஆனால் அவனை நழுவ விட்டாய். 590 00:44:37,592 --> 00:44:38,426 எனக்கு தெரியவில்லை. 591 00:44:38,510 --> 00:44:40,970 பிறகு லாம்ப்லைட்டர் போய் மாலரியின் பேரக் குழந்தைகளை எரித்தான். 592 00:44:41,054 --> 00:44:41,971 எனக்கு தெரியவில்லை. 593 00:44:42,055 --> 00:44:43,306 அது பிரச்சனையல்ல! 594 00:44:44,182 --> 00:44:46,142 நீ உத்தரவுகளை பின்பற்றாததால் அவர்களின் உயிர் போனது. 595 00:44:48,436 --> 00:44:51,189 ஹேய், ஹேய், ஹேய், நிறுத்துங்கள். நிறுத்துங்கள். 596 00:44:51,272 --> 00:44:54,567 தெரியுமா? நாசமாகட்டும், புட்சர். 597 00:44:55,443 --> 00:44:57,404 நீயும் நாசமாகப் போ. கிளம்புகிறேன். 598 00:44:58,613 --> 00:45:00,532 -நாசமாப்போ. -எம்எம், இரு. 599 00:45:02,367 --> 00:45:04,786 இந்த முறை வித்தியாசமாக இருக்கும் என்றாய். 600 00:45:04,869 --> 00:45:07,622 ஆனால் இந்த கேடுகெட்டவன் இன்னும் இங்கே பழைய பிரச்சனையை செய்கிறான். 601 00:45:07,705 --> 00:45:10,500 நாம் எல்லோரும் மாலரியைப் போல் ஆகிவிடுவோம். 602 00:45:10,792 --> 00:45:12,419 -ஆம், நல்லது நாசமாப் போ. -இது ஒழியட்டும். 603 00:45:12,502 --> 00:45:13,628 அட வா. 604 00:45:13,711 --> 00:45:14,671 நீங்கள் இருவருமே. 605 00:45:14,754 --> 00:45:16,756 -எம்எம்? -என்ன? 606 00:45:18,633 --> 00:45:20,176 ஸ்போர்ட்டி ஸ்பைஸ் என்ன செய்கிறாள்? 607 00:45:20,260 --> 00:45:21,261 யாரு? 608 00:45:22,345 --> 00:45:24,514 ஸ்போர்ட்டி ஸ்பைஸ். அவள் என்ன செய்கிறாள்? 609 00:45:28,309 --> 00:45:29,352 எனக்கு தெரியாது. 610 00:45:29,436 --> 00:45:33,231 மிகச்சரி. பாஷ்? அவள் என்ன செய்கிறாள் என்று தெரியுமா? 611 00:45:33,314 --> 00:45:34,482 எனக்கு புரியல. 612 00:45:34,566 --> 00:45:38,486 ஒல்லியானவர்களுக்கு உடை வடிவமைக்கிறாள். சரியா? அது வளரும் சந்தை அல்ல. 613 00:45:39,154 --> 00:45:41,698 மற்றும் பேபி ஸ்பைஸ்? என்ன செய்கிறாள் என்று உனக்கு தெரியுமா? 614 00:45:42,157 --> 00:45:45,410 யாருக்கும் தெரியாது. டெய்லி மெய்லின் ஆறாம் பக்கத்தில் கூட வருவதில்லை. 615 00:45:45,493 --> 00:45:51,082 ஸ்கேரி ஸ்பைஸ், வழக்குகள் மற்றும் ஆபாச காணொலி பதிவுகளில் மூழ்கியிருக்கிறாள். 616 00:45:51,916 --> 00:45:54,294 ஜிஞ்சர், மற்றொரு பக்கத்தில், மூன்று இசைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கா. 617 00:45:54,377 --> 00:45:59,132 பாஷன், ஸ்கிட்ஸோஃபோனிக், ஸ்க்ரீம் இஃப் யு வான்ட் டு கோ ஃபாஸ்டர். 618 00:45:59,215 --> 00:46:01,676 அவை அனைத்தும் காதில் ரத்தம் வரவழைக்கும். 619 00:46:02,469 --> 00:46:06,890 தெரியுதா, அவங்க தனியாக இருக்கும்போது, அவர்கள் வெறும் குப்பை. 620 00:46:07,474 --> 00:46:10,393 ஆனால் அவர்களை ஒன்று சேர்த்தால், 621 00:46:12,270 --> 00:46:14,689 அவர்கள் அருமையான ஸ்பைஸ் கேர்ள்ஸ். 622 00:46:20,403 --> 00:46:22,655 உனக்கு ஸ்பைஸ் கேர்ள்ஸ் பற்றி எப்படி இவ்வளவு தெரியும்? 623 00:46:23,907 --> 00:46:26,201 இல்லை. விஷயம் என்னன்னா... 624 00:46:27,368 --> 00:46:30,163 நாம் எல்லோரும் தனியாக குப்பை தான். 625 00:46:32,040 --> 00:46:33,791 நமக்கு ஒருவரை ஒருவர் தேவை. 626 00:46:33,875 --> 00:46:36,836 நமக்கு பரஸ்பரம் அவசியமிருக்கு இல்லை என்றால் நாம் செத்தோம். 627 00:46:37,754 --> 00:46:40,507 இப்போ, நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்து துவைக்கலாம், 628 00:46:40,590 --> 00:46:41,799 எனக்கு கவலை இல்லை. 629 00:46:41,883 --> 00:46:44,010 ஆனால் அது கடந்த காலத்தை மாற்றாது. 630 00:46:50,934 --> 00:46:53,770 நாம் அந்த அசிங்கமான பெண்ணை கண்டுபிடித்து, 631 00:46:53,853 --> 00:46:57,398 அவளை மயக்கமடைய செய்து, இங்கிருந்து வெளியேறலாம், சரிதானே? 632 00:47:02,612 --> 00:47:04,364 கடவுளே, கேவலமா ஊக்கமூட்டும் உரையை பேசுறான். 633 00:47:04,447 --> 00:47:05,615 கேவலமா தான் பேசுறான். 634 00:47:10,620 --> 00:47:12,664 ஓஷன்லாண்ட் டீப்புடன் ஓஷன்லாண்டுக்கு போங்கள் 635 00:47:14,249 --> 00:47:15,792 சரி, சரி, சரி, சரி! 636 00:47:16,834 --> 00:47:19,254 சரிதான். அடுத்த நிறுத்தம், அட்லான்ட்டிக் பெருங்கடல். 637 00:47:20,046 --> 00:47:22,131 அது சரிதான். ஆம், அது சரிதான். 638 00:47:25,009 --> 00:47:26,010 என்ன? 639 00:47:27,220 --> 00:47:29,389 சரி. சரி. 640 00:47:29,806 --> 00:47:32,350 ஆம், புரியுதா, முதலில் நாம் தப்பிப்பதில் கவனம் செலுத்துவோம், 641 00:47:32,433 --> 00:47:35,353 பின் வேறு சமயத்தில் அதைப் பற்றி பேசுவோம், சரியா. 642 00:47:39,482 --> 00:47:41,276 உன்னை பிடிக்கும். உனக்கு அது தெரியும். 643 00:47:41,442 --> 00:47:43,570 ஆனால் நாம் எதற்கும் அவசரப்பட வேண்டாம். 644 00:47:46,864 --> 00:47:49,534 இரு, நிஜமாவா? இப்போ சரியான நேரம் அல்ல. 645 00:47:51,411 --> 00:47:52,662 நீ விஷயங்களை அவமானகரம் ஆக்குகிறாய். 646 00:47:54,706 --> 00:47:57,625 சரி, சரி. நான் அதை தொட்டால், நீ வாயை மூடுவாயா? 647 00:48:02,130 --> 00:48:03,840 ஓ, நாசம்! நாசம், நாசம், நாசம். 648 00:48:04,299 --> 00:48:05,592 உனக்கு ஒரு சத்தியம் செய்தேன். 649 00:48:24,152 --> 00:48:25,111 34 பென் ரயில் நிலையம் 650 00:49:43,398 --> 00:49:45,108 -போகலாம். -இல்லை, ஃப்ரென்ச்சி. 651 00:49:45,650 --> 00:49:47,193 மறந்திடு, நண்பா. அவள் செத்தாள். 652 00:49:51,280 --> 00:49:55,326 ஏ-ட்ரெய்ன்! இங்கே பாருங்க! பாருங்க, எல்லோரும்! இங்கே ஏ-ட்ரெய்ன் இருக்கிறார்! 653 00:49:55,410 --> 00:49:56,994 -ஏ-ட்ரெய்ன்? -பாரு, ஏ-ட்ரெய்ன். 654 00:49:59,914 --> 00:50:01,165 ஹேய். 655 00:50:06,879 --> 00:50:09,257 ஏ-ட்ரெய்ன், ஹேய், ஹேய், ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா? 656 00:50:09,340 --> 00:50:12,218 நிச்சயமாக, ஒன்றோ இரண்டோ எடுத்துக் கொள்வேன். 657 00:50:40,413 --> 00:50:43,332 இல்லை. என்னை அவளுடன் பேச விடுங்கள். 658 00:50:43,416 --> 00:50:44,876 முட்டாள்தனமாக பேசாதே. 659 00:50:47,128 --> 00:50:48,671 அவள் ஒரு ஸ்பைஸ் கேர்ளாக இருந்தால்? 660 00:50:51,048 --> 00:50:52,091 ஃப்ரென்ச்சி. 661 00:51:14,071 --> 00:51:15,656 நீ வீட்டுக்குப் போக உதவுகிறேன். 662 00:51:51,651 --> 00:51:53,277 அவள் ஸ்பைஸ் கேர்ள் அல்ல. 663 00:52:38,906 --> 00:52:40,283 விமானம் 37 கடத்தப்பட்டது: ஹோம்லாண்டர் பேசுகிறார் 664 00:52:40,366 --> 00:52:42,451 மறுபடியும், ட்ரான்ஸ் ஓஷானிக் விமானம் 37இன் உதிரி பாகங்கள் 665 00:52:42,535 --> 00:52:44,871 கடற்கரைக்கு மிதந்து வருகின்றன. 666 00:52:44,954 --> 00:52:47,415 விமானத்தில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாக கருதப்படுகிறது. 667 00:52:50,710 --> 00:52:51,919 அவர்கள் இறந்திருக்க தேவையில்லை. 668 00:52:53,796 --> 00:52:56,507 ஹோம்லாண்டர் மற்றும் க்வீன் மேவ் களத்தில் இருக்கிறார்கள். 669 00:52:56,591 --> 00:52:57,758 ஏதாவது சொல்ல விரும்பறீங்களா? 670 00:53:00,136 --> 00:53:01,804 அவர்கள் இறந்திருக்க தேவையில்லை என்றேன். 671 00:53:02,305 --> 00:53:05,057 விமானம் விழுந்ததற்கு மூன்று நிமிடங்கள் கழித்து நாங்கள் வந்தோம். 672 00:53:06,017 --> 00:53:07,143 ஏன்? 673 00:53:08,311 --> 00:53:10,479 ஏன்னா நாங்கள் தொடர்பு அட்டவணையில் இல்லை. 674 00:53:12,064 --> 00:53:15,318 ஜெட் விமானங்களை அனுப்புவதற்கு முன் எங்களை அழைத்திருந்தால், 675 00:53:15,401 --> 00:53:16,861 அவர்களை காப்பாற்றி இருப்போம், 676 00:53:16,944 --> 00:53:20,740 நூற்று இருபத்து மூன்று ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள். 677 00:53:20,823 --> 00:53:22,658 மன்னிக்கவும். 678 00:53:28,122 --> 00:53:31,751 ஆனால் எங்களை ராணுவத்திற்குள் அனுமதித்தால், 679 00:53:32,376 --> 00:53:36,964 இது திரும்ப எப்போதும் நடக்காது. இது நான் உங்களுக்கு செய்யும் சத்தியம். 680 00:53:39,091 --> 00:53:40,217 சரிதானே, மேவ்? 681 00:53:43,429 --> 00:53:44,889 உங்க சட்டசபை உறுப்பினர்களிடம் பேசுங்க. 682 00:53:44,972 --> 00:53:47,099 அவர்களிடம் பேசுங்கள். அவர்கள் மக்கள் சொல்வதைக் கேட்பார்கள். 683 00:53:47,183 --> 00:53:48,893 ஒன்றாக இணைந்து, 684 00:53:49,602 --> 00:53:50,895 ஒன்றாக இணைந்து, இனிமேல் நமது 685 00:53:50,978 --> 00:53:55,399 மகத்தான நாட்டில் இவ்வாறு நடக்காது என்பதை உறுதி செய்வோம்! 686 00:53:59,779 --> 00:54:02,698 உங்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிக்கட்டும். 687 00:54:03,115 --> 00:54:04,742 நீங்க சொல்வது கேட்கிறது, ஹோம்லாண்டர்! 688 00:54:04,825 --> 00:54:08,079 நீங்கள் சொல்வதை கேட்கிறேன், சகோதரா! நீங்கள் சொல்வதை கேட்கிறேன்! 689 00:54:08,996 --> 00:54:11,499 உலகமும் நீங்கள் சொல்வதைக் கேட்கிறது! 690 00:54:12,333 --> 00:54:15,002 மிக, மிக விரைவில், நண்பா, 691 00:54:15,086 --> 00:54:18,547 இதை நமக்கு செய்தவர் யாராக இருந்தாலும், நம் அனைவர் சொல்வதையும் கேட்பர்! 692 00:54:20,007 --> 00:54:24,178 ஹோம்லாண்டர்! ஹோம்லாண்டர்! ஹோம்லாண்டர்! 693 00:54:24,261 --> 00:54:27,139 ஹோம்லாண்டர்! ஹோம்லாண்டர்! 694 00:54:27,223 --> 00:54:31,894 ஹோம்லாண்டர்! ஹோம்லாண்டர்! ஹோம்லாண்டர்!